பனி காலநிலையின் அனர்த்தம்!பாரிய வாகன-குவியல்.17பேர்கள் கொல்லப்பட்டனர்.
பீஜிங்-சீனாவின் வடபகுதியில் பனி காலநிலையின் மத்தியில் வாகனங்கள் மோதியதால் 17பேர்கள் கொல்லப்பட்டதுடன் 37பேர்கள் வரை காயமடைந்துள்ளனர்.
மொத்தமாக 56வாகனங்கள் மோதலில் அகப்பட்டுக்கொண்டன. ஷங்காய் மாகாணத்தின் பாரிய கடுகதி பாதையில் திங்கள்கிழமை குளர் மற்றும் வழுக்கல் தன்மையான காலநிலையில் இந்த விபத்து நடந்ததாக அறிவிக்கப்பட்டது.
சீனாவில் அதி வேகம், ஆக்ரோஷமான ஓட்டுதல் ,போதுமான நிறுத்த தூரத்தை கடைப்பிடிக்காமை போன்ற காரணங்களால் நெடுஞ்சாலை விபத்துக்கள் பொதுவானவையாக காணப்படும் போதிலும் இவ்விபத்து கொடூரமானதென கருதப்படுகின்றது.
பொலிசார் தீயணைப்பு பிரிவினர் வைத்தியர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்கிய மீட்பு குழு விசாரனையல் ஈடுபட்டுள்ளது.