கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – வடமராட்சி, புலோலி வட மேற்கைச் சேர்ந்த 57 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
குடும்பப்பெண்ணுக்கு நேற்று சனிக்கிழமை (01) சிறுநீர் அடைப்பு ஏற்பட்டு அவதியுற்று, மயக்கமடைந்துள்ளார்.
இதையடுத்து, அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே அந்த பெண் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இவருக்கு ஈரல் பாதிப்படைந்து அதன் மூலம் கிருமித் தொற்று ஏற்பட்டு, உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.