Scarborough Rouge Park தொகுதியில் சான் சின்னராஜா போட்டி!
Scarborough Rouge Park தொகுதியில் Progressive Conservative கட்சியின் சார்பில் போட்டியிடுவதாக Shean Sinnarajah அறிகுவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறியாகி வருமாறு:
நான் 1996ம் ஆண்டு கனடாவிற்கு ஒரு அகதியாக வந்தது முதல், ஸ்காபுறோ றூஜ் பார்க்
சமூகத்திலேயே வாழ்ந்து வருகிறேன். இந்த சமூகம்தான் என்னை ஆதரித்து, பாதுகாப்பாகவும்
அதேசமயம் சமூகத்தில் ஒருவனாகவும் அங்கீகரித்தது. நான் இதே சமூகத்தில்தான் வளர்ந்து,
வாழ்ந்து பணியாற்றி வருகின்றேன். றூஜ் பார்க் சமூகத்துடனான எனது பிணைப்புத்தான் நான்
இன்று இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம். உறுதியான, பெருமையான ஒரு தனி
மனிதனாக நான் இன்று எனது சமூகத்திற்கு பங்களிப்பை ஆற்றுவதற்கும், றூஜ் பார்க்கிற்காக
குரல் கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறேன்.
நான் எப்போதுமே சமூக மேம்பாடு, அரசியல் செயற்பாடு போன்றவற்றில் ஈடுபட்டிருப்பதுடன்,
கலாச்சாரம், மாணவர் செயற்பாடுகள், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
போன்றவற்றிலும் எனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி வருகின்றேன். நான் Centennial
கல்லூரியில் மாணவனாக இருந்தது முதல், மாணவர் ஒன்றியங்களில் பங்காற்றியதுடன், இன்றும்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், கன்சவேற்றிவ் கட்சியின் உறுப்பினர் குழு போன்றவற்றிலும்
இணைந்து சமூக பணியாற்றி வருகின்றேன். நான் கல்லூரியில் படித்தபோது, என்னைப்போன்ற
பல இளம் மாணவர்கள் அவர்களது இலக்குகளை அடைவதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட
வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதை அறிந்துகொண்டேன்.
எமது சமூகத்தில் கூட, மாணவர்கள் மட்டுமன்றி, ஏனையோரும் பல சிக்கல்களை
எதிர்கொள்வதைக் காண முடிகின்றது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து, உண்மையான
மாற்றத்தைக் கொண்டுவருவதில்தான் Progressive Conservative Party முன்நிற்கின்றது.
நான் எப்போதுமே Conservative கட்சியின் ஆதரவாளராக இருந்ததுடன், எனது எண்ணங்களும்
கூட. Conservative கொள்கைகள் சார்ந்தவையாக இருக்கின்றன.
எனினும், Patrick Brown அவர்களின் தொலைநோக்குப் பார்வைதான், எனது பிரச்சாரத்திற்கான அடித்தளத்தை
உருவாக்குவதற்கு காரணமாக அமைந்தது. இந்த Rouge Park தொகுதிக்கு, Conservative
கட்சியே மிகச் சரியான தெரிவு.
எமது மனங்களில் மிகவும் நெருக்கமாகவுள்ள இந்த சமூகத்தின்தேவைகளை அறிந்து, அதற்கு ஏற்ற வகையில் சேவையாற்றுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.
உங்கள் அனைவரது ஆதரவுடன், எங்களது குரல்களை நிச்சயமாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு கேட்கச் செய்யலாம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
றூஜ் பார்க் தொகுதிக்கு இன்னும் பல விடயங்கள் தேவையாக இருக்கின்றன. முதியோர்
பராமரிப்பு, இளையோர் முன்னேற்றம், போக்குவரத்து போன்றவற்றிற்கும், இயற்கை வளங்களைப்
பராமரிப்பதற்கும் மேலதிக நிதி தேவைப்படுகின்றது. இந்த சமூகத்தில் பல்வேறு தரப்பட்ட
பொதுமக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவருமே பாதுகாப்பாகவும், அவர்களது இலக்குகளை
நிறைவேற்றும் வகையிலும் அவர்களுக்கான உதவிகளை வழங்குவது முக்கியமாகவுள்ளது. அந்த
வகையில் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் நீங்கள் அனைவருமே எப்போது
வேண்டுமானாலும் அணுகும் வகையிலான ஒரு வேட்பாளராக நான் இருப்பேன். உங்களுடன்
இணைந்து பணியாற்றுவதற்கு நான் தயாராகவுள்ளேன்.
நான் இந்த சந்தரப்பத்தைப் பயன்படுத்தி, இங்கே வருகை தந்து எனக்கு ஆதரவளித்த எனது
ஆதரவாளர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்குமே மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கின்றேன். நாம் அடைய விரும்பும் இலக்குகளை உங்களுடைய ஆதரவின்றி
எம்மால் அடைய முடியாது. அந்த வகையில் நீங்கள் வழங்கும் ஆதரவிற்கு நான் எப்போதுமே
நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன்.