வாகனத்தை சோதனையிட்டு கொண்டிருந்த மனிதனுக்கு நடந்த கொடூரம்!
கனடா-பிரம்ரனை சேர்ந்த 28வயது மனிதரொருவர் பழுதடைந்த தனது வாகனத்தை சோதனை செய்து கொண்டிருக்கையில் மற்றொரு வாகனத்தால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் சனிக்கிழமை காலை நடந்தது.
பாதிக்கப்பட்டவர் நெடுஞ்சாலை 401 கிழக்கு பாதையில் வந்து கொண்டிருக்கையில் டிக்சி வீதிக்கருகில் கட்டுப்பாட்டை இழந்ததால் கம்பத்துடன் மோதியதில் சாதாரண காயம் ஏற்பட்டது.
சாரதி தனது வானத்தை வீதியில் இருந்து வெளியே எடுத்து சேதத்தை பரிசோதித்துள்ளார். அதிகாலை 1-மணியளவில் மீண்டும் போக்கு வரத்து லேனிற்குள் நுழையும் போது மற்றொரு வாகனத்தால் மோதப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.