மகள் பற்றிய உண்மையை வெளியிட்ட கெளதமி!
நடிகை கௌதமி கமல்ஹாசனை விட்டு பிரிந்தது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஸ்ருதிஹாசனால் தான் இந்த பிரச்சனை, அந்த நடிகை தான் காரணம் என பல பேச்சுக்கள் அடிபட்டாலும் கௌதமி அவ்வப்போது அவற்றை மறுத்து வந்தார்.
தன் மகளை நடிக்க வைக்க கமல் விரும்பவில்லை என சில கிசுகிசுக்கள் வந்தாலும், தனுஷை சமீபத்தில் சந்தித்து தனது மகளுக்காக வாய்ப்பு கேட்டார் எனவும் செய்திகள் வந்தது.
தற்போது கெளதமி தன் மகள் சுப்புலக்ஷ்மி படத்தில் நடிக்க போவதாக நினைத்து பலர் வாழ்த்துக்கள் கூறியுள்ளனர். ஆனால் அவள் இப்போது நடிக்கவில்லை. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் என அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.
Ty everyone fr d warm wishes fr my baby bt its false news. She is focusd on school right now! No plans fr acting