நாசா வீடியோவில் மர்ம பொருள்! வைரலாக பரவும் வீடியோ
சர்வதேச விண்வெளி நிலையமும், நாசாவும் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் சிறிய அளவிலான வானூர்த்தி பறப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய் கிரகத்திலும், நிலாவிலும் பல ஆராய்ச்சிகளை செய்து அதில் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் நாசா நிறுவனம் தற்போது பூமியின் எல்லை பகுதியில் ஆய்வு செய்து வருகிறது.
இதில் எடுக்கப்பட்ட வீடியோவில் ஒரு சிறிய அளவிலான வானூர்த்தி போன்ற ஒரு சிறிய பொருள் பறப்பது போல் உள்ளது.
சில நொடிகள் மட்டுமே அந்த சிறிய வானூர்தி போன்ற ஒரு பொருள் தெரிந்து பின்னர் நீல நிறமாக ஸ்கீரின் முழுவதும் தெரிவது போல அந்த வீடியோவில் உள்ளது.
இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.