கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து: 73 பேர் உடல் கருகி பலி
மொசாம்பிக் நாட்டில் பெட்ரோல் டேங்கர் லொறி வெடித்து விபத்துக்குள்ளானதில் 73 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 110 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் உள்ள கிராமம் ஒன்றில் நேற்று எரிபொருள் டேங்கர் லொறி ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென லொறி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையில் கவிழ்ந்தது.
இதிலிருந்த பெட்ரோலை பிடிக்க மக்கள் முண்டியடித்து சென்றனர், அப்போது எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியதில் 73 பேர் பலியாகினர், 110 பேர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
பலரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
O Gov central criou equipa de emergência pra juntar-se aos esforços do províncial de #Tete no apoio aos envolvidos no incidente da explosão. pic.twitter.com/AAGqPeoVdZ
Grande parte dos feridos foi transferido para Hospital Provincial de #Tete e Distrital de #Moatize. Alguns para Hospital Rural de #Zobue, pic.twitter.com/PmamOo5DrS