கத்தி சண்டை படம் வெளியாகாது, விஷாலின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகர் சங்க செயலாளர் விஷால், தற்காலிகமாக தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தினர் தேங்காய் உடைத்து மகிழ்ச்சியாக இருந்தார்கள். இதனால் கடுப்பான விஷால் ஆதரவாளர்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்றபோது இரு தரப்பிற்கும் மோதல் நிலவியது.
இதை தொடர்ந்து ஏற்கனவே விஷால், சூரி, வடிவேலு, தமன்னா நடிப்பில் வெளியாக இருந்த கத்திச்சண்டை படம் வெளியாவது இன்னும் உறுதியாகவில்லை என விஷால் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் படம் பற்றிய தகவல் வெளியாகும். ஆனால் இந்த மாதம் வெளியாகாது என அவர் கூறியுள்ளார்.