தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உத்தியோகபூர்வ மொழி கட்டாயமாக்கப்படும்: சீ.வி
வட மாகாணத்தில் தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியை கற்பதற்கும், சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியை கற்பதற்கும் மாகாண சபை சட்டத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வட மாகாண முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம், வடக்கில் உள்ள அனைத்து அரச ஊழியர்களும் தேசிய மொழிகளான சிங்களம் உள்ளிட்ட தமிழ் மொழிகளை கற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் மூலம் இனங்களுக்கு இடையிலான தவறான புரிந்துணர்வு அகற்றப்படும் என்றும் உயர் மட்ட வேலைகளை அணுகுவதற்கு இது வழிவகுக்கும் என்றும் வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.