சூப்பர்ஸ்டாருடன் திரிஷாவா – வெளிவந்த தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.௦ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
அடுத்து தனுஷ் தயாரிப்பில் மீண்டும் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு திரிஷாவை ஜோடியாக போடலாமா என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருக்கும் திரிஷா இன்னும் சூப்பர்ஸ்டாருடன் நடித்ததே இல்லை. அதனாலே தனுஷ் மூலம் எப்படியாவது பா ரஞ்சித் இயக்கும் ரஜினி படத்தில் நடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார் திரிஷா.