மீண்டும் கிராமத்து கதையில் விக்ரம் பிரபு
நடிகர் விக்ரம் பிரபு நடித்து கடைசியாக வெளிவந்த வாகா திரைப்படம் படுதோல்வியை தழுவியது, இந்நிலையில் இவரது அடுத்த ரிலீஸ்க்கு ரெடியாக இருக்கும் படம் வீரசிவாஜி, தற்போது வந்த தகவல் படி சமீபத்தில் சூர்யா என்ற புது முக இயக்குநர் சொன்ன கதை பிடித்து போக உடனே ஓகே சொல்லியுள்ளாராம் விக்ரம் பிரபு.
இப்படம் ஒரு கிராமத்து கதையை சார்ந்தது. இதற்கு முன் எழில் இயக்கத்தில் வெள்ளக்கார குதிரை படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு பக்கா என்ற தலைப்பு வைத்துள்ளனர்