அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு வட கொரிய ராணுவம் கடும் எச்சரிக்கை
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பிற்கு வட கொரியா ராணுவம் ஒரு அதிரடி எச்சரிக்கையை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகியதை தொடர்ந்து தற்போது முதல் முறையாக வட கொரியா ராணுவம் அமெரிக்காவில் அமைந்துள்ள புதிய அரசுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதில், ‘வட கொரியாவில் அணு ஆயுத சோதனைகள் நடத்துவதை ஒபாமா கடுமையாக எதிர்த்து வந்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக ஐ.நா சபை மற்றும் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் என வட கொரியா முன் வந்தது.
ஆனால், வட கொரியாவின் அறிவிப்பை நிராகரித்து ஒபாமா இதுவரை வட கொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிற்கு வட கொரியா ராணுவம் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதில், ‘அமெரிக்காவில் அமைந்துள்ள புதிய அரசாங்கத்துடன் இணைந்து அணு ஆயுதம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த தயார்.
ஆனால், எந்த சூழலிலும் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த மாட்டோம்’ என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், வட கொரியாவின் இந்த எச்சரிக்கைக்கு அமெரிக்க அரசு இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.