தாய்லாந்திற்கான அந்த துரதிஸ்டம் மிக்க பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் அவுஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் இருதயபரிசோதனையை மேற்கொண்டிருந்தால் அவர் இன்றும் எங்களுடன் இருந்திருப்பார் என சேன்வோர்னின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சேர்ன்வோன் கடந்த வருடம் மார்ச் மாதம் தாய்லாந்தில் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார்.
இந்த துயரம் அவுஸ்திரேலியாவிற்கு மீள முடியாத வேதனையை கொடுத்துள்ள அதேவேளை சேன்வோர்னின் மரணம் அவுஸ்திரேலியர்கள் தங்களை இருதய சோதனைக்கு உட்படுத்தி தங்களை காப்பாற்றிக்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என சேர்ன்வோர்னின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நியுஸ்கோர்ப்பிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சேர்ன்வோர்னின் பிள்ளைகள் அவுஸ்திரேலியர்கள் தொடர்ச்சியாக இருதயசோதனையை மேற்கொள்ளவேண்டும் என்பதை நினைவுபடுத்தியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் அதிக உயிரிழப்புகளிற்கு இருதயநோய்களே காரணமாக உள்ளன – 12 வீதமானவர்கள் இதனால் உயிரிழக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்களிற்குஇலவச இருதயசோதனை வழங்குவதன் மூலம் அவர்களை காப்பாற்றும் சேன்வோர்ன் பாரம்பரிய திட்டத்தை உருவாக்குவதற்கு தனது தந்தையை நேசித்த மக்கள் எப்படி ஊக்குவித்தார்கள் என்பதை சுழற்பந்து ஜாம்பவான் சேன் வோர்னின் மகன் ஜக்சன் வோர்ன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மார்ச் மாதம் சேன் வோர்ன் மாரடைப்பினால் உயிரிழந்தார் இதனை தொடர்ந்து இருதயநோய் குறித்த அக்கறை அவுஸ்திரேலியர்கள் மத்தியில் திடீர் என அதிகரித்தது – இது சேன்வோர்ன் பாதிப்பு என அழைக்கப்படுகின்றது.
தனது தந்தையின் மரணத்தின் பின்னர் அவுஸ்திரேலியர்கள் மத்தியில் இருதயநோய் குறித்த அக்கறை அதிகரித்ததை தான் நேரடியாக பார்த்ததாக சேன்வோர்னின் மகன் தெரிவித்துள்ளார்.
ஜிம்;மிலும் வீதியிலும் மக்கள் என்னிடம் வந்து உங்கள் தந்தை எங்கள் கதாநாயகன் ஆனால் அவர் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தவேளை நான் அழுதேன் ஆனால் அதன் பின்னர் என்னை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என தீர்மானித்தேன் என தெரிவித்தனர் என சேன்வோர்னின் மகன் தெரிவித்துள்ளார்.
எங்கள் இதயத்தை சோதனைக்கு உட்படுத்தாவிட்டால் நாங்கள் இங்கிருக்கமாட்டோம் எனவும் சிலர் தெரிவித்தனர் என சேன்வோர்னின் மகன் தெரிவித்துள்ளார்.
அவ்வேளை எனது தந்தை ஒரு மிகப்பெரிய பாரம்பரியத்தை விட்டுச்சென்றுள்ளார் அது அவுஸ்திரேலியர்களை பெருமைப்படவைத்துள்ளது என நான் நினைத்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து நிமிடங்களிற்குள் இருதயசோதனையை வழங்கும் திட்டத்தை தனது சகோதரர்களுடன் இணைந்து ஆரம்பித்து வைத்த பின்னர் சேன்வோர்னின் மகன் இதனை தெரிவித்துள்ளார்.
சில வாரங்களிற்கு முன்னர்துரித இருதய பரிசோதனையை மேற்கொண்டுள்ள அவர் அவுஸ்திரேலியர்களையும் அவ்வாறான சோதனைகளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நான் இளமையாக ஆரோக்கியமாக இருக்கின்றேன் என நினைத்தேன் பிழையாக எதுவும் நடக்காது என நினைத்தேன் ஆனால் பலரை போல கொவிட்டிற்கு பின்னர் சிறிய கரிசனையும் காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் நான் அந்த சோதனையை செய்து முடித்ததும் பெரும் நிம்மதியடைந்தேன் அனைவரும் அந்த நிம்மதியை பெறவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.’
அப்பா எப்போதும் ஏனையவர்களின் முகத்தில் சிரிப்பை புன்னகையை விதைப்பதற்காக தனது சக்தி நேரத்தை செலவிட்டார் ஆகவே மக்களின் உயிர்களை காப்பாற்றி அவரது பாரம்பரியத்தை எங்களால் காப்பாற்ற முடிந்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என ஜக்சன் வோர்ன் தெரிவித்துள்ளார்.