ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை வழக்கில் குற்றவாளியான முன்னாள் பொலிஸ் அதிகாரி டெரெக் சௌவின் மீது சிறையில் மற்றொரு கைதி கத்தியால் குத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்து வைதத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் பணியாளர் பற்றாக்குறை உள்ள நடுத்தர பாதுகாப்பு கொண்ட டியூசன் சிறையில் இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் சிறைச்சாலை ஊழியர்கள் காயமடையவில்லை. அத்தோடு, சுமார் 380 கைதிகள் உள்ள சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிட செல்வதற்கு தடை போடப்பட்டது.
சௌவின் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் கடந்த ஐந்து மாதங்களில் கைதி மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் சம்பவமாகும்.
கடந்த ஜூலை மாதம், அவமானப்படுத்தப்பட்ட விளையாட்டு வைத்தியர் லாரி நாசர், புளோரிடாவில் உள்ள சிறைச்சாலையில் சக கைதியால் கத்தியால் குத்தப்பட்டார்.
அமெரிக்காவில் கடந்த 2020 ஆண்டுகளுக்கு முன்னர் ‘ஜோர்ஜ் ப்ளொய்ட்‘ என்ற கறுப்பினத்தவரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார் , அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தியதில் அவர் மூச்சு திணறி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், உலக நாடுகள் பலவற்றில் இனவெறிக்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், ‘ஜோர்ஜ் பிளாய்ட்டின் மரணத்திற்குக் காரணமாக இருந்த 47 வயதான டெரெக் சௌவின், ஜோர்ஜ் பிளாய்ட்டின் சிவில் உரிமைகளை மீறியதற்காக 21 வருட தண்டனையையும், இரண்டாம் நிலை கொலைக்காக 22½ வருட மாநில தண்டனையையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க, ஆகஸ்ட் 2022 இல் அதிகபட்ச பாதுகாப்பு மினசோட்டா மாநில சிறையிலிருந்து டக்ஸன் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், சௌவின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என கூறி அவரை பொது மக்களிடமிருந்தும் மற்ற கைதிகளிடமிருந்தும் ஒதுக்கி வைக்க வேண்டும் என வழக்கறிஞர் வாதிட்டததை அடுத்து மினசோட்டாவில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்,
இதேவேளை, கடந்த வாரம் சௌவின் தாக்கல் செய்த மேன்முறையீட்டை அமெரிக்க உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
அதாவது, ஜோர்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு தான் மட்டும் காரணமில்லை என்று புதிய ஆதாரங்களை முன்வைத்து தன் மீதான குற்றத்தை இரத்து செய்ய நீண்ட முயற்சிகைளை மேற்கொண்டுள்ளார்.