வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெய்யந்தர நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு முடிவடைந்து நீதிமன்ற கடமைகளை நிறைவேற்றிய பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளால் குறித்த கைதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைதி விளக்கமறியலிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் தெய்யந்தர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.