FCIDயினரால் கேட்கப்பட்ட கேள்விகளால் திணறிய வீரவன்ச மயங்கி விழுந்தார்!
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது நடைபெற்ற விசாரணையின் இடையில் அவர் திடீரென சுகயீனமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் 90 கேள்விகளை விமல் வீரவன்சவிடம் கேட்டுள்ளனர்.
இதனால் அவரால் பதிலளிக்க முடியாமல் தலை வலிக்கின்றது, தலை சுற்றுகின்றது என கூறி மயக்கமடைந்ததன் பின்னர் விசாரணை பிரிவின் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் விமல் வீரவன்சவுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்புக்கு அமைய இன்று காலை 9.39 மணியளவில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் விமல் வீரவன்ச ஆஜராகியிருந்தார்.
அரசாங்க வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்று பெற்றுக் கொள்வதற்காகவே இன்று விமல் வீரவன்ச அழைக்கப்பட்டிருந்தார்.
சிறந்த உடல் நிலை தொடர்பில் அறிவித்ததன் பின்னர் விசாரணை மேற்கொள்வதற்காக வேறு தினத்தை கோரியுள்ள நிலையில் விமல் வீரவனச் நிதி மோசடி விசாரணை பிரிவில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.