ஒன்ராறியோவின் மாதாந்த அடிப்படை வருமானம் எவ்வளவாக இருக்க வேண்டும் தெரியுமா?
கனடா- ஒன்ராறியோ மாகாணத்தின் அடிப்படை வருமானம் எவ்வளவாக இருக்க வேண்டும் என்ற ஒரு தெளிவான படத்தை மாகாண மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காண்கின்றனர்.
அடிப்படை வருமான பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக தனிப்பட்ட ஒருவருக்கு மாகாணம் மாதமொன்றிற்கு 1,320டொலர்கள் வழங்க வேண்டுமெனவும் ஒன்ராறியோவில் உள்ள பல சமூகங்களிற்கு இது பொருந்தும் எனவும் இத்திட்டத்தை வடிவமைக்கும் பணியில் மாகாணத்துடன் சேர்ந்து பணியாற்றும் முன்னாள்-செனட்டர் Hugh Segal வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் குறித்த பொது ஆலோசனை கோரல் அரசாங்கத்தினால் நவம்பர் 2016 முதல் 2017 தை மாதம் வரை இடம்பெறும்.
Ontario Works மற்றும் the Ontario Disability Support Program (ODSP), ஆகியனவற்றால் நிர்வகிக்கப்படும் சமூக உதவி கொடுப்பனவுகளையும் மாற்றலாம் என கூறப்படுகின்றது.
மாகாணத்தின் குறைந்த வருமான அளவீடு (LIM), தனி நபர் வருமானம் 22,000 டொலர்கள் மற்றும் நால்வர் அடங்கிய குடும்பம் ஒன்றிற்கு சரியாக 44,000 டொலர்கள்.
குறைந்த வருமானம் பெறும் தனிப்பட்டவர்கள் குறைந்த வருமான அளவீட்டுத் தொகையின் குறைந்தது 75 சதவிகிதத்தை மேலதிகமாக பெறலாம் எனவும் Ontario Works மூலம் சமூக கொடுப்பனவு பெறுபவர்கள் LIMன் 45-சத விகிதத்தை பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தமாக குறைந்த வருமான குடியிருப்பாளர் குறைந்தது 1,320 டொலர்களை பெறுவர் அத்துடன் வேலையில் இருந்து அவர்கள் பெறும் பணத்தின் ஒரு பகுதியையும் வைத்திருக்கலாம்.
ஊனமுற்றவர்கள் மேலதிகமாக குறைந்தது 500 டொலர்களை பெறுவர் என Segal தெரிவித்தார்.