ஒரே மாதத்தில் ரெண்டு லட்டு – ஜி வி பிரகாஷ் குஷி
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிவருகிறார் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவான ஜி வி பிரகாஷ். இந்நிலையில் இவரது படமான கடவுள் இருக்கான் குமாரு வருகிற நவம்பர் 10 தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு,
தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைக்கவே, தற்போது நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
மேலும் இதே மாதத்தில் வருகிற 25ம் தேதி இவரது இன்னொரு படமான ப்ருஸ் லீ படமும் வெளிவரவுள்ளது. இதன் மூலம் ஒரே மாதத்தில் ரெண்டு லட்டு ரசிகர்களுக்கு தருகிறார் ஜி வி பிரகாஷ்.