கடைசி நிமிட தீர்வினால் பாடசாலை பேரூந்து வேலை நிறுத்தம் இரத்து.
கனடா-ரொறொன்ரோ பெரும்பாகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாடசாலைகளிற்கு செல்வதற்கான தங்கள் வழக்கமான பேரூந்து சவாரிகளை தொடரந்து இன்று காலை பெறுவார்கள்.
பாடசாலை பேரூந்துகள் அனைத்தும் வியாழக்கிழமை வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நிமிடத்தில் அடையப்பட்ட ஒரு தற்காலிக ஒப்பந்தம் நிலைமையை வழமைக்கு கொண்டுவந்துள்ளது.
இரவு இடம்பெற்ற ஒரு கடினமான பேரத்தின் பின்னர் Unifor லோக்கல் 4268 காலை 6-மணிக்கு சிறிது முன்னராக வேலைநிறுத்தம் பெரும்பாலும் தடுக்கப்பட்டு விட்டதாத உறுதிப்படுத்தியுள்ளது.
ரொறொன்ரோ மற்றும் யோர்க் பிராந்திய பாடசாலை பேரூந்துகள் வழக்கம் போல் இயங்கும்.
பேச்சுவார்த்தை புதன்கிழமை மாலை 5மணிக்கு ஆரம்பமாகி நடு இரவுவரை சென்றுள்ளது.