இனிஷியல் மூலம் உலக பிரபலமான இலங்கை வீரர்கள்
அது அதிக இனிஷியல் கொண்ட கிரிக்கெட் வீரர்கள் என்ற பெருமையே ஆகும்.
தற்போது நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கியுள்ள வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாராவும் அதிக இனிஷியல் கொண்ட கிரிக்கெட் வீரர் பட்டியலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
UWMBCA வெலகெதர ( 6 இனிஷியல்)
உடவளவ்வ மகிம் பண்டாரலாகே சானக்க அசங்க வெலகெதர அதிக இனிஷியலை கொண்ட கிரிக்கெட் வீரர் என்ற தனிப்பெருமையை பெற்றுள்ளார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான வெலகெதர அவுஸ்திரேலியாவில் குடிபெயர்ந்துள்ளார். இவர் இலங்கை அணிக்காக 21 டெஸ்ட போட்டி, 10 ஒரு நாள் போட்டி, 2 டி20 ஓவர் போட்டியில் விளையாடியுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை விளையாடிய போட்டியே வெலகெதர விளையாடிய கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
WPUJC வாஸ் (5 இனிஷியல்)இலங்கை அணியில் முத்தையா முரளிதரனுக்கு பிறகு பந்து வீச்சில் ஒரு அடையாளமாக திகழ்ந்தவர் சமிந்த வாஸ். இலங்கைக்காக 322 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்டுகளை கைபற்றியுள்ளார்.
355 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு வாஸ் ஓய்வு பெற்ற பின்னர், தற்போது வரை அவரை போன்ற சிறந்த பந்து வீச்சாளர் இன்னும் இலங்கை அணியில் உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
HMRKB ஹேரத் (5 இனிஷியல்)இலங்கை அணியில் முரளிதரன் ஓய்வுக்கு பிறகு சிறந்த சுழற் பந்துவீச்சாளராக திகழ்ந்து வரும் ஹேரத், தற்போது நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியை வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
PADLR சந்தகன் (5 இனிஷியல்)சுழற் பந்து வீச்சாளரான Paththamperuma Arachchige Don Lakshan Rangika சந்தகன், சமீபத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணியை வைட் வாஷ் செய்ய உறுதுணையாக இருந்ததின் மூலம் பிரபலமடைந்தார்.
25 வயதான சந்தகன் முன்னாள் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் பால் ஆடம்ஸ் பாணியில் பந்து வீசுவதாக கூறப்படுகிறது.
CBRLS குமார19 வயது வேகப்பந்து வீச்சாளரான Chandradasa Brahammana Ralalage Lahiru Sudesh குமார, தற்போது நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கியுள்ளார்.