மீண்டும் ரசிகர்களுக்காக இளையதளபதி! செம ஹிட் கொடுக்க ரெடி! என்ன ஸ்பெஷல் ?
விஜய் தற்போது பைரவா படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். ஏற்கனவே, சுவிஸ், துபாய் என படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியா வந்த விஜய் சிறு ஓய்விற்குப்பிறகு திருநெல்வேலியில் தன்னுடைய கிராமத்து பையன் கேரக்டரில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே சிட்டி பையனாக மாடர்ன் ஹேர் ஸ்டைலில் விக் வைத்து நடித்தது படக்குழுவிற்கு மிக பிடித்து விட்டது. மேலும் மிக அழகாகவும், பொருத்தமாகவும் உள்ளதாக உணர்கிறார்கள்.
கதையில் முக்கிய அம்சங்கள் வேகமாக படம் பிடிக்கப்பட்டுவருகிறது. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டும் தான் ஷூட்டிங் உள்ளதாம். இளையதளபதிக்கும் ஒட்டுமொத்த யூனிட்டுக்கும் பெரிய த்ரிஷ்டி கழிக்க தயாராகி கொண்டிருக்கிறார்கள்.
மேலும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விஜய்யை ஒரு டூயட் பாடலில் பாட வைத்துள்ளாராம். விஜய் பாடியதை பார்த்து மெய்சிலிர்த்த சந்தோஷ், சார் எப்படி ஒரு ப்ரபொஷனல் சிங்கர் மாதிரி பாடுறீங்க என் கேட்டே விட்டாராம்.
மேலும் விஜய் ஏற்கனவே டியூனை வாங்கி கேட்டு, ஸ்டுடியோவுக்கு புத்துணர்ச்சியோடு வர வரிகள் அத்தனையும் ஒரே டேக்கில் பக்காவாக முடித்து கொடுத்துள்ளார்.
பாடுவது எனக்கு புதிதல்ல. நானும் ப்ளே பேக் சிங்கர் தான். என்னுடைய 2 வது படத்திலிருந்து பாடி வருகிறேன் என சிரித்து கொண்டே சொன்னாராம்.