பிரிட்டிஷ் கொலம்பிய பாடசாலையில் கத்தி குத்து.
கனடா-பிரிட்டிஷ் கொலம்பியா-Abbotsford உயர்தர பாடசாலையில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் மாணவி ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து இளம் வாலிபன் ஒருவன் கைதாகியுள்ளான். இவன் குறிப்பிட்ட பாடசாலை மாணவன் அல்ல என தெரிவதாக Abbotsford தலைமை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை பிற்பகல் 2.05 மணியளவில் Abbotsford Senior Secondary School லில்சம்பவம் நடந்துள்ளது.
கத்திகுத்திற்கு ஆளான இருபெண் மாணவர்களினதும்விபரங்கள் வெளியிடப்படவில்லை.
யார் இந்த சந்தேக நபர் காரணம் என்ன என்பன கேள்வி குறியாக உள்ளது.
ஒருங்கிணைந்த ஆட்கொலை புலனாய்வு பிரிவினர் விசாரiiயை கையேற்றுள்ளனர்.