சீனாவில் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 33 பேர் பலி
சீனாவில், திங்களன்று சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தை அடுத்து,சுரங்கத்தில் இருந்த 33 தொழிலாளர்களும் இறந்துவிட்டதாகச் சீனாவின் அரசு ஊடகங்கள் கூறுகின்றன.
நூற்றுக்கணக்கான அவரச கால பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையில் சீனாவின் தென் மேற்கு பகுதியில் நடந்த வெடிவிபத்தில், இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
நிலத்தடியில் நிகழ்ந்த வெடிப்பு காரணமாக சுரங்கங்கள் சரிந்தன, இது அங்கு நச்சுத் தன்மை வாய்ந்த மீத்தேன் வாயு உருவாகும் நிலையைத் தூண்டியது.