ராகுல் காந்தி அதிரடி கைது..!
இந்திய தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாரை பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காக ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஓய்வூதிய திட்டம் பிரச்சனை தொடர்பாக நேற்று ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார்.
இந்நிலையில்,டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் உள்ள பாதிக்கப்பட்ட இராணுவ வீரரின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்திக்க முற்பட்ட போதே பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
ராகுல் காந்தி மட்டுமின்றி டெல்லி துணை முதல்வரும் மனீஷ் சிசோடியா உட்பட பலரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை எதிர்த்து மந்திர் மார்க் பொலிஸ் நிலையம் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.