மெஸ்ஸியை போல் ஏமாற்றிய பிரபல வீரர்! ரசிகர்களை உறைய வைத்த அசத்தல் கோல்
சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஆர்சனல் அணியில் விளையாடி வரும் ஜேர்மன் நட்சத்திர வீரர் ஓசில், மூன்று வீரர்களை ஏமாற்றி அடித்த அசத்தல் கோல் வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
சாம்பியன்ஸ் தொடரின் நான்காம் நாள் நடந்த போட்டியில் ஆர்சனல், Ludogorets Razgrad அணிகள் மோதின.
இதில் ஆர்சனல் 3-2 என்ற கோல் கணக்கில் Ludogorets Razgrad அணியை வீழ்த்தியது.
ஆட்டத்தில் ஆர்சனல் நட்சத்திர வீரர் ஓசில் அடித்த கோல் மைதானத்தை அதிர வைத்தது மட்டுமின்றி இணையத்தை கலக்கி வருகிறது.
குறித்த வீடியோவில், ஓசில் எதிரணியின் கோல் கீப்பர் உட்பட மற்ற இரண்டு வீரர்களையும் ஏமாற்றி அசத்தல் கோல் அடிக்கிறார்.
இந்த கோலை பார்த்த பலர் ஓசில் மெஸ்ஸி பாணியில் குறித்த கோலை அடித்ததாக பதிவிட்டுள்ளனர்.