பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய கொடி, காஷ்மோரா- முதலிடம் யாருக்கு? 2 நாள் வசூல் விவரம்
தனுஷ் நடிப்பில் கொடி, கார்த்தி நடிப்பில் காஷ்மோரா இந்த இரண்டு படங்களும் தான் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. இப்படங்களின் முதல் நாள் வசூல் தான் கொஞ்சம் டல் அடித்தது.
ஆனால், நேற்று தீபாவளியை முன்னிட்டு வசூல் மழை பொழிந்துள்ளது, இந்த படங்களில் காஷ்மோரா இரண்டு நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.
கொடி 2 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே ரூ 13 கோடி வரை வசூல் வந்துள்ளதாக தெரிகின்றது, ஏனெனில் கொடி தயாரிப்பாளரே ‘இப்படத்தின் முதல் நாள் வசூலை கொடி நேற்று இரண்டே ஷோக்களில் எடுத்துவிட்டது’ என்றார்.
கார்த்திக்கு ஆந்திராவில் நல்ல மார்க்கெட் இருப்பதால் காஷ்மோரா வசூலில் முந்தியுள்ளது