கண்ணதாசனே பரப்பிய வதந்தி – ஒரு திகிலான பிளாஷ்பேக்
வதந்தி என்பது இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் தீயாய் பரவ கூடிய விஷயம். இதில் பல நடிகர்கள் சிக்கியுள்ளனர், சமீபத்தில் கூட நடிகர் கவுண்டமணி, கே ஆர் விஜயா போன்றவர்கள் இறந்து விட்டதாக வதந்தி கிளம்பியது.
இந்த மாதிரியான வதந்தி தற்போது மட்டுமல்ல எம் ஜி ஆர் காலத்தில் கூட நிகழ்ந்து இருக்கிறதாம், அதுவும் பிரபல கவிஞர் கண்ணதாசனே ஒரு வதந்தி பரப்பிவிட்டுள்ளாராம். 1963 ம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. திடிரென்று ஸ்ரீதருக்கு ஒரு போன் கால், கண்ணதாசன் இறந்து விட்டதாக தகவல் வருகிறது, படப்பிடிப்பினிடையே அலறி கொண்டு நடிகை தேவிகாவிடம் சொல்லி கொண்டு கிளம்பினார், தேவிகா நெஞ்சை பிடித்து கொண்டு அப்படியே உக்கார்ந்து விட்டார், எம் எஸ் விஸ்வநாதன் மயக்கமே போட்டு விட்டார்.
வீட்டுக்கு சென்ற பார்த்த ஸ்ரீதர் கண்ணதாசன் வீட்டில் இல்லை, பாடல் எழுதுவதற்காக ஓட்டல் அறையில் தங்கி இருக்கிறார் என்று அவரது சகோதர்கள் சொன்னார்கள், உடனே ஓட்டலுக்கு சென்றால் அங்கு சிரித்து கொண்டே ஸ்ரீதரை வரவேற்றார் கண்ணதாசன். உங்களுக்கு ஏதோ ஆச்சு என்று தகவல் வந்ததே என ஸ்ரீதர் கேட்க, அந்த தகவலை நான் தான் பரப்பினேன் என்றார், ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு இப்படி ஒரு வதந்தியை பரப்பி அனுதாபத்தை பெற்றால் எனக்கு திருஷ்டி கழியும் என்று ஒரு ஜோதிடர் சொன்னார். மேலும் நான் செத்தால் நீங்கள் எப்படி அழுவீர்கள் என்று எனக்கு பார்க்க ஆசையாக இருந்தது என்று குறும்புத்தனமாக பதில் அளித்தார்.