உளநல ஆரோக்கியத்திற்கு ஜஸ்டின் நிர்வாகத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்
உளநல ஆரோக்கியம் தொடர்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிர்வாகத்தில் உயர் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என உளநல மையத் தலைவர் வைத்தியர் கத்தரின் வலியுறுத்தியுள்ளார்.
உளநலம் சார்ந்த நோய்களினால் 6.7 மில்லியன் கனடியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உளநல மையம் சுட்டிக்காட்டியுள்ளது. இது கனடிய மக்கள் தொகையின் சுமார் 20 சதவீதமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது புற்றுநோய் மற்றும் ஏனைய தொற்று நோய்களைவிட பாரிய சுமையை ஏற்படுத்தி வருகிறது.
கனடாவின் சுகாதார துறைக்கு ஒதுக்கப்படும் தொகையில் வெறும் ஏழு வீதமான தொகையே உளநல நோய் காரணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே எதிர்காலத்தில் உளநல ஆரோக்கியம் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் குறித்த அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.