இவரை தெரியுமா? பேரூந்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர்.
கனடா-ரொறொன்ரோ- இந்த மாதம் மோர்னிங் சைட் ஹைட்சில் TTC பேரூந்தில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேக நபரை பொலிசார் தேடுகின்றனர்.
பொலிசாரின் கூற்று பிரகாரம் அக்டோபர் மாதம் 2-ந்திகதி பிற்பகல் 2.30மணியளவில் மோனிங்சைட் மற்றும் விஞ்ச் அவெனியு பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஸ்ரெயின்ஸ் வீதி மற்றும் வாப்லர் சேர்க்கிள் அருகில் உள்ள தரிப்பில் இப்பெண் ஏறியுள்ளார். அப்போது குறிப்பிட்ட மனிதன்- ஏற்கனவே பேரூந்தில் இருந்தவர் இப்பெண் அமர்ந்த இருக்கைக்கு நேர் பின்னால் மாறினார்.
சிறிது நேரத்தின் பின்னர் மனிதன் அடுத்த தரிப்பில் இறங்குவதற்கு மணியை அடித்து விட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு பேரூந்தை விட்டு இறங்கி சென்று விட்டார்.
சந்தேக நபர் 50ற்கும் 60வயதிற்கும் உட்பட்டவரெனவும் 160 இறாத்தல் எடையுடையவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நபர் கறுப்பு முடி, மீசையுடன் கறுப்பு ஜக்கெட், நீல ஜீன்ஸ், கண்ணாடி மற்றும் முன் புறத்தில் டொலர் அடையாளம் கொண்ட லோகோவுடனான கறுப்பு/ பிறவுன் பேஸ் போல் தொப்பியும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நபரால் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்புகின்றதாகவும் அவர்கள் வெளிவரவில்லை எனவும் விசாரனையாளர்கள் தெரிவித்தனர்.
சந்தேக நபரின் படம் பாதுகாப்பு கமராவில் இருந்து ரொறொன்ரோ பொலிசாரல் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருடன் 416-808-4200 அல்லது அனாமதேயமாக கிரைம் ஸ்ரொப்பசுடன் 416-222-TIPS (8477).தொடர்பு கொள்ளலாம்.