பப்புவா நியூ கினியா தீவில் பயங்கர நிலநடுக்கம்!
நியூ பிரிட்டன் தீவை ஒட்டியுள்ள பப்புவா நியூ கினியா கடலோரப் பகுதியில் இன்று 6.9 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
நியூ பிரிட்டன் தீவு மற்றும் பப்புவா நியூ கினியா தீவின் வடக்கு கடலோரப் பகுதியையொட்டி, கடலுக்கு அடியில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.9 ஆக பதிவாகி இருந்ததாகவும், இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என்றும் அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு இதேபகுதியில் கடலுக்கு அடியில் அடுத்தடுத்து உண்டான 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் விளைவாக மூன்றுமுறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2100 பேர் பலியானது நினைவிருக்கலாம்.