இடிந்த கட்டிட இடிபாடுகளிற்கிடையில் இறந்த பெற்றோர்களின் கைகளிற்கிடையில் பாதுகாக்கப்பட்ட 3வயது பெண் குழந்தை.
இடிந்து சரிந்த வீடுகளிற்குள் அகப்பட்ட இறந்த பெற்றோர்களின் மேற்கைகளிற்கிடையில் பாதுகாக்கப்பட்டிருந்த 3-வயது பெண்குழந்தையை மீட்பு பணியாளர்கள் இழுத்து எடுத்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
இக்குழந்தை 12 மணித்தியாலங்கள் இடிபாடுகளிற்கிடையில் உயிருடன் இருந்துள்ளாள்.திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்தது. தாய் தந்தை குழந்தை மூவரும் ஒரே இடத்தில் கிடந்தனர்.சீனாவின் கிழக்கு பகுதியில் வீடுகள் அமைந்துள்ள கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22பேர்கள் கொல்லப்பட்டனர். ஆறு பேர்கள் தப்பியுள்ளனர்.
குழந்தை சிறு காயங்களுடன் தப்பி விட்டாள். பெற்றோர் இருவரும் முகம் குப்பற கிடக்க சிறுமி அவர்களிற்கிடையில் நிமிர்ந்த நிலையில் சிதைபாடுகளிற்குள் கிடந்தாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடம் சரிந்து விழ காரணம் என்ன என தெரியவரவில்லை. கிராமபுறங்களிலும் மற்றும் சிறிய நகரங்களிலும் ஏழ்மையான கட்டுமான தரம் சீனாவில் நீண்ட காலமாக ஒரு பிரச்சனையாக இருந்து வருகின்றதென கூறப்பட்டுள்ளது.