எரிபொருளின் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வகை எரிபொருளின் விலையும் 100 ரூபாவினால் அதிகரிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் எரிபொருளின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடி
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் பல மணிநேரம் வீதிகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், இரவு பகலாக காத்திருந்தும் எரிபொருள் கிடைக்காமல் திரும்பிச் செல்லக் கூடிய நிலையையும் காணக்கூடியதாக உள்ளது.
அத்துடன், எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மற்றும் அரச ஊழியர்களின் வேலை போன்றவற்றில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன். விவசாயத்துறையிலும் எரிபொருள் நெருக்கடி பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.