மாத்தறை ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்து இளைஞர் ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திக்வெல்ல – வெவுருகன்னல பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞராவார்.
மாத்தறையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் எற முயன்ற போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
ஒரு மணித்தியாலமாக மாத்தறை செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் அருகில் இருந்தவர்களும் அவரை காப்பாற்ற முயன்றபோதும் அவரை காப்பாற்ற முடியவில்லை.