வென்னப்புவ வைக்கால் கடற்கரையில் நேற்று (17) மாலை குழந்தை ஒன்றின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சுமார் 4 அடி உயரம் கொண்ட 5 வயது சிறுவன் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் கடந்த 15ஆம் திகதி மாலை வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் பெண்ணொருவரால் களனி ஆற்றில் வீசப்பட்ட குழந்தையா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.