எரிபொருள் நெருக்கடி காரணமாக நாட்டை முடக்கவேண்டிய தேவையில்லை என பிரதமரும் ஜனாதிபதியும் தெரிவித்துள்ளனர் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.முடக்கல் அல்லது ஊரடங்கு அவசியமா என அமைச்சர்கள் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இருவரும் இதனை நிராகரித்துள்ளனர்.எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் நாட்டை முடக்கவேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவித்துள்ளனர்.
எனினும் திங்கட்கிழமை முதல் இணையவழியில் கல்வி அரசாங்க அலுவலங்களின் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.