இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டம் குறித்து உருவாகியுள்ள சர்ச்சையால் ஏமாற்றமடைந்துள்ளதாக இந்தியாவின் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
பெறுமதி மிக்க அயல்நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதே எங்கள் முதலீட்டின் நோக்கம் பொறுப்புணர்வுள்ள பெருநிறுவனம் என்ற அடிப்படையில் எங்கள் தேசங்கள் எப்போதும்பகிர்ந்துகொண்டுள்ள இணைந்த செயற்பாட்டின் முக்கியமான அம்சமாக நாங்கள் இதனை கருதுகின்றோம் எனஅதானி குழுமம் தெரிவித்துள்ளது.
உருவாகியுள்ள இந்த சர்ச்சை காரணமாக நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம் உண்மைஎன்னவென்றால் இந்த விடயத்திற்கு அரசாங்கத்திற்குள் தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.