மின்சார சட்டத்தில் அவசியமான மாற்றங்களை ஏற்படுத்த தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் காஞ்சன விஜயசேகர தொழிற்சங்களை கடுமையாக விமர்சித்துள்ளார்
டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நான் அவசியமான மாற்றங்களை மேற்கொள்ள தயாராகவுள்ளேன், திறமையற்ற நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமையாகவுள்ள அழுத்தம் கொடுக்கும் தொழிற்சங்கங்கள் காரணமாக இலங்கை முன்னோக்கி நகராது.
பல தொழிற்சங்கங்கள் வர்த்தக நலனிற்காகவோ அல்லது தங்கள் நிறுவனத்திற்காகவோ போராடுவதில்லை மாறாக தங்களின் நலனிற்காகவே போராடுகின்றன.
தடையற்ற மின்சாரத்திற்கும் குறைந்த செலவுடனான மின்சார உற்பத்திக்கும் மக்களிற்கு உரிமையுள்ளது, தங்களிற்கான சேவை வழங்குநரை மக்கள் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு இலங்கையில் இல்லை.
பொதுமக்கள் தங்கள் உரிமைகளிற்காக போராடவேண்டும்,சட்டத்தரணிகளும் அந்த நலனிற்காகவும் குறைந்த செலவுடனான மின்உற்பத்திக்காகவும் போராடுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.
தற்போதுள்ள இலங்கை மின்சாரசபை சட்டத்தில் திருத்தங்கள் தேவையில்லை, புதுப்பிக்கதக்க சக்திதிட்டங்களை தாமதமின்றி செயற்படுத்தும் திறன் அதற்குள்ளது என்றால் புதுப்பித்தக்க சக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக பலர் விடுத்த வேண்டுகோள்களை ஏன் அது நிராகரித்தது என அவர் தெரிவித்துள்ளார்.