லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் உணவு விநியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.
இதனையடுத்து வைத்தியசாலைக்கு தேவையான அளவை விட அதிகமான உணவுப் பொருட்களை இலங்கை மக்கள் வழங்கி நெகிழ வைத்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் வைத்தியசாலையில் உணவுப் பொருட்கள் தேவைக்கு அதிகமாக கிடைத்தால் வீணாகிவிடலாம் எனவும், முடிந்தால் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை நன்கொடையாளர்கள் வழங்குமாறும் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேவையான மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களின் பட்டியல வெளியிடப்பட்டுள்ளன.
இதேவேளை மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக, பணிப்பாளர் கூறினாலும், நாட்டில் போதியளவு மருந்துகள் இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.