இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் இன்று காலை 1000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயதான இந்திய வர்த்தகரான இவர் இலங்கைக்கு தொழில் நிமித்தமாக வந்திருந்த நிலையில், இன்று அதிகாலை 02.30 மணியளவில் இந்தியாவின் சென்னைக்கு 6E1208 இன் இண்டிகோ விமானத்தில் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது கட்டுநாயக்க விமான நிலைய இடம்பெயர்வு பயணிகள் முனையத்தில் உள்ள கழிவறைக்கு குறுகிய நேரத்தில் பல தடவைகள் சென்று வந்த நிலையில், அவரது பயணப் பொதிகளுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரது பயணப் பொதிகளை சோதனையிட்டதில் 117,000 கனேடிய டாலர்கள் மற்றும் 19,000 யூரோக்கள் ரொக்கமாக இருந்மை கண்டறியப்பட்டுள்ளது.
அவர் எடுத்துச் சென்ற வெளிநாட்டு நாணயங்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதையடுத்து சுங்கத்துறை துணை இயக்குநரால் குறித்த .பயணி எடுத்துச் சென்ற வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்டதுடன் 10,000 ரூபா அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.