இந்திய வீரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்
இந்திய அணி, நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் போர்டு செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்களின் சம்பளத்தை இரு மடங்கு உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து பி.சி.சி.ஐ தலைவர் அனுராக் தாகூர் கூறுகையில், டெஸ்ட் போட்டியின் வளர்ச்சி குறித்து விவாதித்தோம். டெஸ்டில் பங்கேற்கும் வீரர்களின் விருப்பத்தை அதிகரிக்கும் வகையில், சம்பளத்தை உயர்த்தி உள்ளோம். என்றார்.
அதன் படி முதலில் டெஸ்ட் போட்டிகளில் 7 லட்சம் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த வீரர்களுக்கு 15 லட்சம் ரூபாயும், 3.5 லட்சம் வாங்கிய வீரர்களுக்கு 7 லட்சம் ரூபாயும் தரப்படும் என அறிவித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் மாநிலசங்கத்திற்கு தரப்படும் நிதியை பி.சி.சி.ஐ உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.