பாகுபலி நாயகனுக்கு கிடைத்த கெளரவம்: இனி எப்போதும் பார்க்கலாம்
இந்தியாவின் அதிக வசூல் ஈட்டப்பட்ட படம் பாகுபலி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த படம் வெளியான பிறகு உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார் பிரபாஸ்.
அவரை பெருமைப்படுத்தும் விதமாக தற்போது உலகப் புகழ்பெற்ற பாங்காக் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இவர் நடித்த பாகுபலி கதாபாத்திர சிலை நிறுவப்படவுள்ளது.
இச்சிலைவடிவமைப்பிற்காக ஹைதராபாத்தில் மேடம் டுசாட்ஸ் குழு நடிகர் பிரபாஸ்ஸின் பல்வேறு விதமான அளவீடுகள் எடுக்கும் வகையில் 350க்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
மகாத்மா காந்தி, நரேந்திர மோடி போன்ற பலருக்கு ஏற்கனவே மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.