எழுக தமிழ் பேரணியில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள்!
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பமாகியுள்ளது.
வடமாகாண முதலமைச்சர் தலைமையில்,பாராளமன்ற உறுப்பினர்கள், வடமாகண விவசாய அமைச்சர், வடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், மதகுருமார், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, பெருமளவிலான மக்கள், வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்குபேருந்துகளில் வருகைதந்த வண்ணமே உள்ளதாகவும் கூறப்படுகின்றது.