வெளியாகிறது விராட் கோஹ்லியின் சர்ச்சை ரகசியங்கள்!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவராக திகழ்ந்து வரும் ஆக்ரோஷமான வீரர் விராட் கோஹ்லியின் இதுவரையிலான பயணம் புத்தகமாக வெளிவர உள்ளது.
ட்ரிவன்- தி விராட் கோஹ்லி ஸ்டோரி என்ற பெயரில் வெளிவர உள்ள இந்த புத்தகத்தை, ஆறு உலகக் கிண்ணத்தில் செய்தி சேகரித்த விஜய் லோகபல்லி எழுதியுள்ளார்.
டோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் மற்றும் புத்தகம் வெளியாகும் அதே நேரத்தில் கோஹ்லியின் புத்தகமும் வெளியாகிறது.
இதில் பல சர்ச்சைகள், தந்தை மரணித்த போது அடித்த அந்த 90 ஓட்டங்கள், கம்பீருடன் ஐ.பி.எல் போட்டிகளில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. அனுஷ்கா ஷர்மாவுடன் ஒன்றாக ஹோட்டலில் தங்கியது.
உலகக் கோப்பையில் ஆஸியை வென்று ட்விட்டரில் ‘SHAME’ பதிலடி தந்தது என கோலியின் அபார வளர்ச்சி முதல் பல விடயங்களை உள்ளடக்கியது என கூறப்படுகிறது.