“சாத்தியமான பயமுறுத்தல்” பிரின்ஸ் எட்வேட் ஐலன்ட் பாடசாலைகள் அனைத்தும் வெளியேற்றம்!.
கனடா-சார்லட்ரவுன், நியு பவுன்லாந்–சகல பிரின்ஸ் எட்வேட் ஐலன்ட் பொது பாடசாலைகளிலும் இருந்து 19,000ற்கும் அதிகமான மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். “சாத்தியமான பயமுறுத்தல்” ஒன்றே காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சில விபரங்களே கிடைக்க கூடியதாக உள்ளது. ஆனால் ஆசிரியர்களும் பணியாளர்களும் 60ற்கும் மேற்பட்ட ஆங்கில மற்றும் பிரெஞ்ச் பாடசாலை மாணவர்களை அப்பகுதியில் பாதுகாப்பான பகுதிகளிற்கு பேரூந்துகளில் அழைத்து சென்றனர்.
மேலதிக விபரங்கள் தெரிவிக்கப்படும் வரை பிள்ளைகளை அழைத்துச்செல்வதற்கு காத்திருக்குமாறு பெற்றோர்களை கேட்கப்பட்டுள்ளதாக ஆர்சிஎம்பி தெரிவித்துள்ளது.
நோவ ஸ்கோசியாவில் மூன்று பாடசாலைகள்—மார்க்கோனி வளாகம் கேப் பிரட்டன் பல்கலைக்கழகம் மற்றும் NSCC தொழில்நுட்ப வளாகம் கலிவக்ஸ்—ஆகியனவும் வெளியேற்றம் செய்யப்பட்டன.