கோத்தாபாயவே லசந்தவை கொலை செய்தார்! பாராளுமன்றில் அம்பலப்படுத்திய அமைச்சர்
சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் இன்று இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடந்த விவாதத்தின் போது மகிந்த அணியின் உறுப்பினர் ஒருவர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக சரத் பொன்சேகாவிடம் வினவினார்.
இதற்கு பதிலளித்த பொன்சேகா, லசந்தவை கொன்றது கோத்தபாய என பதிலளித்தார். லசந்த விக்ரமதுங்க 2009ஆம் ஆண்டு ஜனவரிஅ 8ஆம் திகதி தெஹிவளை அத்திட்சிய பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.