நியூயோர்க் தொடர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி கைது
அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலம் மற்றும் நியூயேர்ச்சி நகரில் கடந்த வார இறுதியில் முன்னெடுக்கப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியை கைது செய்துள்ளதாக அம்மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 28 வயதான அஹமட் கான் ரஹானி என்ற பெயருடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. இவர் ஆஃக்கானிஸ்தானில் பிறந்த அமெரிக்க குடியுரிமையை பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நேற்று (திங்கட்கிழமை) காலை எலிசபெத் அவன்யு என்ற பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும். தற்போது அவர் பொலிஸாரின் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறான போதும், அவர் தங்கியிருந்த குறித்த பகுதியை பொலிஸார் சோதனையிட வேண்டிய தேவை இருப்பதன் காரணமாக அப்பகுதி வாசிகளை பொலிஸார் வேறு இடங்களிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.