குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், இந்திய நடிகருடன் சண்டைப் போடுவதற்காக படக்குழுவினருடன் அமெரிக்கா சென்றுள்ளார்.
‘வேர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்திற்குப் பிறகு விஜய் தேவரகொண்டா பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லைகர்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை, பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை சார்மி, பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கிறார்கள்.
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்டப் பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். முதன்முறையாக மைக் டைசன் நடிக்கும் முதல் இந்தியப் படம் என்பதால் அதிக எதிர்ப்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா – மைக் டைசன் காட்சிகளை எடுக்க படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. அங்குள்ள ஹோட்டலில் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா உற்சாகமுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]