சினிமாவின் அறிமுகத்தில் விஜய், அஜித்திற்குமிடையே உள்ள ஒற்றுமை- எத்தனை பேருக்கு தெரியும்?
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்கள் எப்போது வந்தாலும் அன்றைய நாள் தான் தமிழகத்திற்கு தீபாவளி.
அந்த அளவிற்கு பல லட்சம் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இவர்கள் என்ன தான் ஒற்றுமையாக இருந்தாலும் இவர்களுடைய ரசிகர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் சண்டைப்போட்டு கொண்டே தான் இருப்பார்கள்.
இந்நிலையில் இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவில் ஒரே மாதிரி தான் அறிமுகமாகியுள்ளனர், எப்படி என்று கேட்கிறீர்களா?.
விஜய்யின் நாளைய தீர்ப்பு படத்தின் அறிமுக காட்சியில் விஜய் உடற்பயிற்சி செய்வார், அதன் பிறகே முகத்தை காட்டுவார்கள்.
அதேபோல் அஜித்தின் அமராவதி படத்தின் அறிமுக காட்சியிலும் அஜித் உடற்பயிற்சி செய்த பின் தான் முகத்தை காட்டுவார்கள்.
தெரிந்தோ, தெரியாமலோ தலதளபதி அறிமுகமே ஒற்றுமையாக தான் இருக்கின்றது, ரசிகர்களும் அப்படி ஒற்றுமையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.