செரினாவுக்கு அதிர்ச்சி கொடுத்த வீராங்கனை! முடிவுக்கு வந்தது 186 வார ஆதிக்கம்
இத்தோல்வியை அடுத்து, தொடர்ந்து 186 வாரங்களாக உலகத்தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வந்த செரினாவின் ஆதிக்கம் முடிவுக்கு வர உள்ளது.
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைப்பெற்று வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர்-1 வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், 10ம் இடத்திலுள்ள செக் குடியரிசின் கரோலினா பிலிஸ்கோவாவை எதிர்கொண்டார்.
இதில் செரினா 2-6, 6-7 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.
22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று ஜேர்மனியின் ஸ்டெபி கிராப் சாதனையை சமன் செய்த இவர், தொடர்ந்து அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்த வீராங்கனை வரிசையிலும் ஸ்டேபி கிராப்பை சமன் செய்துள்ளார்.