பைரவா டைட்டிலில் மறைந்திருக்கும் ரகசியங்கள்- இதோ
இளைய தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வருட பொங்கலுக்கு வரும் படம் பைரவா. இப்படத்தை பரதன் இயக்க, விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்தது, இதன் டைட்டில் லோகோவிலேயே பல விஷங்கள் உள்ளது. பைரவா என்றால் காக்கும் கடவுள் என்று அர்த்தம். சமஸ்கிருதத்தில் பைரவா’ என்றால் ‘பயம்கொள்ள வைப்பவர்’ என்ற அர்த்தம் கூறப்படுகிறது.
மேலும் சிவபெருமான் கையில் உள்ள திரிசூலம் போன்று பைரவா’ என்ற டைட்டிலின் முதல் எழுத்து ‘பை’ வடிவமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி கல்வெட்டுக்களில் பதிவு செய்வது போன்ற எழுத்து வடிவில் இந்த டைட்டில் அமைக்கப்பட்டுள்ளது.